தமிழனின் பிரமாதமான மூளைத்திறனை என்னவென்பது. நேற்று கும்பகோணம் சென்றிருந்தேன். ஆன்மீகச் சுற்றுலா. கும்பேஸ்வரன் கோவில் சென்றிருந்தபோது, கோவில் கோபுரக்கலசங்கள் பற்றிய ஒரு விவாதம். அதற்குமுன் ஒரு சிறு கதை.
கும்பேஸ்வரன் கோவில் உதயமானதின் வரலாறு என்னவென்றால்,
உலகில் பிரளயம் வரவிருப்பதை உணர்ந்த பிரம்மன் மற்றும் மக்கள், சிவனிடம் சென்று முறையிட, அதைத் தடுக்க முடியாத சூழலில், அமிர்தம் மற்றும் அத்தியாவசிய விதைகளை ஒரு கும்பத்தில் வைத்து, அதை ஆராதித்து வழிபட்டு வந்த சிவன், பிரளய நாள் நெருங்கியதால், அதனை உயர்ந்தெழுந்து நின்ற மேகமரு மலையின் மேல் வைத்து விடுகிறார்.
ஆனாலும் வெள்ளம் மலையின் சிகரத்தினை முட்ட, அந்தக்கும்பம் அடித்துச்செல்லப்படுகிறது.
வெள்ளத்தின் ஓட்டத்தில், தென்திசை நோக்கி நகர்ந்த கும்பம், தமிழ் மாநிலத்தின் பகுதியில் வருகையில், அதிலிருந்த பூ, பழங்கள், தேங்காய் ஒவ்வொன்றாக உதிர , அது உதிர்ந்த இடங்களில் எல்லாம் ஒவ்வொரு சிவலிங்கங்கள் தோன்றுகிறது. வெள்ளம் வடிந்த வேளையில், அந்தக் கும்பம் குடமாக மாறியிருந்த்து.
அதனை வேடுவன் வேடத்தில் வந்த சிவன் அம்பெய்து உடைக்க, அமிர்தம் பொங்கி வழிந்து மண்ணோடு கலக்கிறது. மண்ணில் வழிந்த அமிர்தம் குழைத்து, அதனை சிவலிங்கம் வடிவினில் பிடித்து, அதைச்சுற்றிக் கோவில் எழுப்பி, அதனையே கும்பேஸ்வரன் என்று இன்றுவரை வழிபட்டு வருகிறோம் என்கிறது வரலாறு. ஆஹா.!!
சரி, கோபுரக் கலசங்கள் பற்றிய விவாதத்துக்கு வருவோம். அதில் என்ன இருக்கும்? மாநிலத்தின் ஒவ்வோரு பகுதியிலும், அந்தப்பகுதிக்குப் பெயர்போன தானியங்கள் மற்றும் நெல்
மணிகளைச் சேகரித்து, அதனை கலசங்களில் வைத்து, இயற்கைப் பேரிடர் எதுவும் தகர்க்க முடியாத கோபுரக் கலசங்களில் வைத்துப் பாதுகாத்திருக்கிறான் தமிழன். அதன் வீரியமானது 12 வருடங்கள் வரை மட்டுமே நீடிக்கிறது. அதனாலேயே, ஒவ்வொரு 12 வருடங்களுக்கும், கும்பாபிஷேகம் செய்து, அவற்றை புதுப்பிக்கிறோம். இது எவ்வளவு பெரிய விஞ்ஞானம். இதன் மகத்துவம், இவ்வளவு நாள் எனக்குத் தெரியாமல் போனது, வெட்கப் படக்கூடிய விஷயம். இயற்கையின் சீற்றத்தோடே விஞ்ஞானத்தால் விளையாடியிருந்த தமிழன், இன்று தனக்குண்டான தலைமையை சரிவரச் செதுக்காமல் நிற்கின்றான் என்றால். அது நம் தலைவிதி!!
இவ்வளவு வரலாற்று உண்மைகளை எனக்குத் தெரியப்படுத்திய என் மனைவிக்கு நன்றி. தமிழினத்தின் மீது தனி மரியாதை இனி!!
நான் தமிழன் என்பதில் பெருமை!!
#குருப்ரம்மா
No comments:
Post a Comment