அறுவடை நாள்: 2015
"அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இதே வேலையா போச்சு.. ரோடு வரைக்கும் வந்ததும்தான் ஞாபகம் வருமாக்கும்.. எங்கதான் வெப்பிங்களோ உங்க கண்ணாடியை" என்று சலித்துக்கொண்டுமீண்டும் வீட்டினுள் சென்றாள் வள்ளி, அவள் வரும்வரை ரேடியோவை நோண்டலாமே என்று ஆன் செய்து சேனலை மாற்றிக்கொண்டே வந்தான் கட்டதுரை, மகளுடன் பேசிக்கொண்டே!!
ஆலுமா டோலுமா..
அடி ஏன்டீ ஏன்டீ
காதல் யானை வருகிறான் ரெமோ..
தும்பி ஹோ..
நாகை அருகே உருவான காற்றழுத்த...
"ப்ரேமம் பிரேமாதி ப்ரேமப்பிரியம்".. என்று ராஜகம்பீரத்துடன் ராஜா ஒலிக்க.. சட்டென்று அவன் கைகள் தானாய் நின்றது.. தொடரவிட்டான் அந்தப்பாடலை..
கடந்து சென்ற ஒரு 50 வயது நிரம்பிய மங்கை அவளுக்கு, சுட்டு விரலால் நெற்றியிலிட்ட குங்குமக்கீற்றைப்போல, உதட்டினில் சிறியதொரு புன்னகை.. முணுமுணுக்கிறாள் பாடலுடனே!!
"இன்று என் ஜீவன் தேயுதே என் மனம் ஏனோ சாயுதே"
ஜெபக்கனி, 50 வயது நிரம்பிய பெண்மணி.. உதகை ஊனமுற்றோருக்கான பள்ளியின் தலைமை ஆசிரியை. மனதில் ஆயிரமாயிரம் கேள்விகளுடனே சமூகத்தில் போராடி வாழ்ந்துவரும் லக்ஷக்கணக்கான பெண்களுக்குள் ஒருத்தி.. அந்தப்பாடல் அவளை என்னவோ செய்திருந்தது... புன்னகை பூத்த உதடுகளின் ஓரத்தினில் கண்ணீரின் ஈரத்துளிகள் கடந்து கழுத்தை நோக்கிப்பாயும் நேரம்.. "ஐயோ அம்மா.. என கூக்குரல்கள் கேட்டுத் திரும்பினாள் .. "டமால்"..
------------------------------------------------------------------------------------------------------------------------
1985 - "இருந்தாலும் இந்த பீட்டர் பயலுக்கு இவ்வளவு திமிரு ஆகாதுங்க, எவ்வளோ சொல்லியும் கேக்காம ஒரு இந்துப் பொண்ண தைரியமா கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கறான் பாருங்க.. அவங்க அப்பா அவனை வீட்டுக்குள்ளாற கூட சேர்க்கலயாம்",
என்று டீயை அலசிக்கொண்டே ஒரு பெருசு அங்கலாய்த்தது!!
கடை மாஸ்டர் "யோவ் பீட்டர் எக்கேடு கேட்டா எனக்கென்ன, முதல்ல கடைய காலி பண்ணுய்யா, ஒரு மணி நேரமா ஒரேய டீயை குடிச்சுட்டு கெடக்க”!!, என்று கூறிக்கொண்டே நிமிர்ந்து பார்க்க, அங்கே பீட்டர்!! ரெண்டு பார்சல் காப்பியை வாங்கிக்கொண்டு வீடு நோக்கி நடந்த பீட்டரின் கால்கள், தேவாலயத்தின் வாசலில் நின்றது.. பிதாவுக்கு, சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் முறையே நமஸ்காரங்களை சொல்லிவிட்டு நகர்ந்தான்..
“கண்ணம்மா காப்பியக்குடி வா.. ஆரப்போகுது”.. என்று பீட்டரின் குரல் கேட்க, விரிந்திருந்த கூந்தலின் முனையினில் முடிச்சுப்போட்டுக்கொண்டே வந்து நின்றாள் கனிமொழி.. இன்னிக்கும் ஏண்டி இதே புடவைய கட்டி இருக்க, வேற புடவையை இல்லையா கண்ணு, என்று சற்றே குரலுயர்த்திப் பேசியவனைக்கண்டதும், டம்பளரைக் கொண்டுவந்து அமைதியாக வைத்தவள் சொன்னாள், இன்னிக்கு எங்கம்மா நினைவுநாளுங்க, அதோட சீல.. ஆசையா இருந்துச்சு..
மதிய சாப்பாடு இன்னிக்கு வாங்கியாந்துடறேன். அந்த வேளாங்கண்ணி மாதா மேல நம்பிக்கை வெச்சு, நம்ம கோலப்பன்கிட்ட சொல்லிருக்கேன். பணம் ஏற்பாடு பண்ணித்தரேன்னாப்ல, முதல் வேலை அடுப்பு, சரியா என்று சிரித்துக்கொண்டே குளிக்க நடந்தான். கோலப்பன், பீட்டரின் நண்பன். மதியம், சாப்பாட்டு இல்லை தொட்டியில் வந்து விழ, நாய்கள் தின்னத்தொடங்கின.. பீட்டர் அயர்ந்து தூங்க, கனிமொழிக்கோ தனது வீட்டினில் நடந்த சண்டைகள் கண்முன் வந்து போயின. "20 வயசு ஆச்சு எருமைமாடு போல வளந்துருக்க.. அறிவில்ல?? பி எட் முடிச்சா, பெரிய இவளா நீ.. பீட்டராம் பீட்டர்.. கால உடைச்சு வீல் சேர்ல உக்கார வெச்சுடுவேன் தெரியும்ல"!! என்று அடிக்க கை ஓங்கிய அப்பாவின் காலில் விழுந்துக் கதறிய கனியின் அழுகை..
அவளது அப்பாவின் கோவத்தை சிறிது குறைக்கத்தான் செய்தது. சமாதானப்படுத்தினாள் பீட்டருக்காக. அப்பா ஒப்புக்கொள்ளவில்லை.. கனி தாயில்லாப்பெண் என்பதால் தடுக்கவும் மனம்வரவில்லை.. சேமிப்புக்கணக்கில் உள்ள சொற்ப பணத்தினைக்கொடுத்து "இனி இங்கே வராதே.. நான் காசிக்குப்போறேன்.. நீ தைரியசாலி, வாழ்ந்துக்கோ. காலை பதினோரு மணிக்கு ஊட்டிக்கு ட்ரைன்" என்று கூறி, தனது மொபெட்டில் அவளை குன்னூர் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச்சென்றார்..
------------------------------------------------------------------------------------------------------------------------ "நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி"
கோலப்பன் கொடுத்த பணத்தின் தயவால் அடுப்பெரிந்தது அவள் வீட்டில். பீட்டர் வேலைபார்க்கும் பார்வையற்றோர் பள்ளியில், கனிக்கும் வேலை அமைய, சிறு சிறு சண்டைகளுக்கும், நிறைவான சந்தோஷத்திருக்கும் குறைவில்லாத வாழ்க்கை, மலைப்பாதை ரயில்போல ஓடிக்கொண்டிருக்க, கனி கருவுற்றாள்!! லீவில்லாமல் ஒன்பதாம் மாதம் வரை பள்ளிக்குச் சென்ற கனிக்கு, அடுத்த ஒரு மாத ஓய்வு ஒரு பெரிய அமைதியைத் தர.. பீட்டருடனான காதல் இன்னும் அதிகமானது.. 1986 ஆம் ஆண்டு.. நவம்பர் ஒன்று.. பீட்டருடனும், வீங்கிய வயிறுடனும்..சைக்கிளில், உட்கார முடியாமல் தேக்கிக்கொண்டே, பீட்டருடனான முதல் சினிமா பார்க்கச்சென்றாள்.. ஆம்.. அவர்கள் அதுவரை ஒன்றாக படம் பாத்திருக்கவேயில்லை.. குழந்தை பிறந்து போகலாம் என்றிருந்தவளை, பீட்டர் கட்டாய படுத்தி அழைத்து சென்றான்.. திரையில்.. சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்று நடிகர் திலகமும் அவர் தாயாரும் பூத்தூவ, கரகோஷத்தால் அதிர்ந்தது திரையரங்கு.. திரையினில் ஆடுகள் மேய.. "ப்ரேமம் பிரேமாதி ப்ரேமப்பிரியம்"என்று ராஜா ஆரம்பித்ததும், கனியின் வயிற்றினுள்ளிருந்து ஒரு உதை.. அந்த குழந்தை ராஜாவிற்குத் தந்த ராஜமரியாதை, அதை கனியவள் ரசித்துக்கொண்டே பீட்டர் கண்பார்க்க, வாஞ்சையாய் அணைத்துச்சிரித்தான்.. திரையில் ஹெல்மெட்டுடன் வரும் பெண்ணவளைக் கண்டதும், "" ஏங்க ஒரு மொபட் வாங்கலாமா" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், ஏதோ புகை வாசனை வர.. என்னவென்று பார்க்காத திரும்பினாள்.. ஐயோ என்று அலறிச்சரிந்தவள், மருத்துவமனையில் கண்விழிக்க, அவளுடனே நூற்றுக்கணக்கில் மக்கள்கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.. எழமுயற்சித்தவளை செவிலி தடுக்க, தனது வயிறது சுருங்கிக்கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டு வினவ, பிறந்தது ஆண் என்று கூறி மற்ற பேஷண்டுகளைப் பார்க்க ஓடினாள் செவிலி.. பீட்டரைத் தேடியவளுக்கு கிடைத்ததென்னவோ அவனது உருக்குலைந்த சடலம் மட்டுமே. திரையரங்கில், தாண்டவமாடிய தீயினிற்க்கு பலியானோரில் பீட்டரும் ஒருவன். கலப்புத் திருமணத்தால், உதவிக்கு ஆளின்றி, அந்த சிறு நகரில் தன் குழந்தையைப் பிடித்தபடி, கிறித்தவ இடுகாட்டினில் பீட்டருக்கு படுக்கை கிடைக்காமல், பரிசல் கிருஷ்ணா என்னும் பீட்டரின் நண்பர் உதவியால், இடுகாட்டினில் தகனம் செய்து முடித்தாள். பீட்டர்ரது மறைவிற்குப் பின்னே,தன் குழந்தையுடன் புலம்பெயர்ந்து, நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் வரலாற்று ஆசிரியையாக சேர்ந்திருந்தாள்.

நவம்பர் 1: 1990
அன்று கெவினிற்க்கு நான்கு வயது முடிந்திருந்தது.. பிறந்தநாளுக்கு அன்புப்பரிசாக ஒரு சிறு மோதிரம் வாங்கிப்போட்டிருந்தாள். கருவாக உருவான அன்றிலிருந்தே மூடிய அவனது கண்கள், இன்னும் திறவாததுகண்டு, தினமும் அழுவாள். அந்தக்குழந்தைக்கு பேச்சும் வராதது அவளது பலத்தினை இன்னும் குறைத்தது. கன்னங்களில், அழுகைத்தடம் மறைவதற்குள் மீண்டும் அழுகை. சிரிப்பதையே மறந்திருந்தாள். பள்ளியின் பேராசிரியர் குமார் அவர்களின் உதவியினால், ஒரே ஒரு அறைகொண்ட ஒரு தனி வீடு வாடகைக்கு எடுத்து அங்கே தங்கி வந்தாள். குமார், 55 வயது முதிர்ந்த பிரம்மச்சாரி, தங்கமான மனிதர். கனிமொழியென்றால் தனி பிரியம்.. மகளாகவே பாவித்து வந்தார். அங்கே பார்வையற்றோருக்கான பள்ளியில், குமாரின் முயற்சியால், 1996 ஆம் வருடம், கெவினுக்கு அனுமதி கிடைத்தது. பத்து வயது குழந்தையான தன் மகனின் அடிப்படைத் தேவைகளைக்கூட கவனித்து, ஆசிரியைப் பொறுப்பும் கொண்டு, வாழ்க்கைப் பேரிடரிழைத்த அத்தனை கொடுமைகளையும் தாங்கி, ஒரு கன்னியாஸ்திரியை போல புனித வாழ்வு வாழ்ந்து வந்தவளுக்கு, அடுத்த அடி மேலும் பலமாக விழுந்தது. அவள் பணிபுரிந்த பள்ளிக்கு, மாணவ வரத்து குறைவு என்று கூறி அரசு அப்பள்ளியை மூட முடிவு செய்திருந்தது. அன்று, அந்தப்பள்ளியின் இறுதி நாள். குமார் அவர்கள் தலைமையில், ஆசிரியர்களுக்குண்டான கடைசீ கலந்தாய்வு. அழுதபடி நின்ற அத்துனை பேருக்கும் வெவ்வேறு ஊர்களில் வழி செய்த குமாருக்கு, கனிமொழியை அனுப்ப மனமில்லாததால், தன் மகளாக தன்னுடனே இருக்கும்படி கேட்டுக்கொண்டார். கனியும், அவர் விண்ணப்பமேற்று அவரது மகளானாள். இருவரும், திருவையாறு அரசு மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்களாகினர். கனியின் வாழ்க்கை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

"பிறந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக"
அன்று, நவம்பர் 1, 2004, கெவினின் பதினெட்டாம் பிறந்தநாளன்று, கனியும் கெவினும் குமார்சாரின் படத்தின் முன் நின்று வணங்கிவிட்டு, தனது மொபெடில் வழக்கம் போல கிளம்பினாள் பள்ளிக்கு.. பேராசிரியை கனியென்றால், அந்தப்பள்ளியில் அனைவர்க்கும் சிம்மசொப்பனம். தொழிலில் நேர்த்தி என்றாலும், சிரிப்பதே இல்லை என்று அனைவரிடத்தும் பெயரெடுத்திருந்தாள். வாழ்க்கை தந்த சாபங்கள் கண்டோ என்னவோ.. சிரிப்பதென்பதே பிடிக்காமல் போனது அவளுக்கு.. அதுவும் பிடித்திருந்தது கனிக்கு. தனது அப்பாவும், பீட்டரும், குமார் சாரும், அவளது சிரிப்பில் கரைந்து விடுவார்களோ என்றஞ்சி, தனது சிடுமூஞ்சித்தனத்தில் சிறை பிடித்திருந்தாள். விரகத்தீயும் வற்றி விரக்தியான தருணம்.

2004, டிசம்பர் 17 ஆம் தேதி அன்று வெளி வந்த "காதல்" திரைப்படத்தின் "தொட்டுத் தொட்டு என்னை, வெற்றுக்களிமண்ணை", பாடலை கேட்டுக்கொண்டிருந்தான் கெவின். திருவையாற்றின் சங்கீதக்கரைகளில் வளர்ந்துவந்த 18 வயது வாலிபனுக்கோ, அவன் வயதொத்தவர்களைப்போல பேசவும் ,பார்க்கவும் முடியவில்லை என்ற ஏக்கம், காதலிக்க நேரமிருந்தும் முடியவில்லை, படிப்பும் ஏறவில்லை. உள்ளூடே ஒரு மிருகமாகிக் கொண்டிருந்தான். மிருகத்தனம் அதிகமாகி, அன்றிரவு, தன் தாயுடன் சண்டையிட்டு தன் கைகளை அறுத்துக்கொண்டே விட்டான். பிறகென்ன, கனியழுது, மருத்துவமனையில் சேர்த்து .. கெவின் பிழைத்து. அப்பப்பா.. கனியின் விதி!! கெவின் படுக்கையில் கிடைக்க.. அருகினில் அமர்ந்து, அவன் கைகள் பற்றி, அழுதுகொண்டிருந்தவளை அறிந்த வனஜா என்னும் ஒரு செவிலித்தாய், "வேளாங்கண்ணிக்கு போயி கண்மலர் வாங்கிப்போடம்மா, மாதா பாத்துப்பா" என்று கனியை அணைத்து ஆறுதல் கூறிச்சென்றாள்.. இன்னும் ஐந்து நாட்களில் கிருஸ்துமஸ், கும்பல் அதிகமாக இருக்கும், முடிந்ததும் போகவேண்டுமென முடிவெடுத்திருந்த கனியை, தான் கிருஸ்துமஸ் அன்று வேன் எடுத்து, குடும்பத்துடன் கிளம்புவதாகக்கூறி அழைத்தாள் அதே செவிலி. கனியின் முகத்தில் ஒரு மலர்ச்சி. பீட்டருக்கும் வேளாங்கண்ணிக்கு உண்டான இணைப்பு, கெவினுக்கும் அமையும் என்ற ஆசை. கெவினுக்கு அங்கே சென்றால் ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை.

டிசம்பர் 25 2004, மக்களால் நிரம்பி வழிந்தது வேளாங்கண்ணி, ஆலய தரிசனம், கண்மலர், பிரார்த்தனை, ஆயிற்று. கெவினுக்கு கடலில் குளிக்க ஆசை. இதுவரை கடல் கண்டதில்லை அவன். மன்னிக்கவும், அலையோசை கேட்டதில்லை அவன். அவனுக்காக, ஒரு நாள் தங்குவதென்று முடிவெடுத்து, அந்தச்செவிலி குடும்பத்தாரிடம் நன்றி பகிர்ந்து அவர்களை அனுப்பிவைத்து, கடற்கரையோரம் நின்ற மண்டபமொன்றில் படுத்துக்கிடக்கையில்., விடியாமல் விடிந்தது டிசம்பர் 26, 2004.. அறிவிப்பின்றி வந்த அதிகாலைச்சுனாமியால், கண்ணிமைக்கும் நேரத்தில் சகலமும் முடிந்து, சடலங்களாகக்கிடந்தது. எங்கு திரும்பினும் மரண ஓலம்., கரைதட்டிய பிணங்களில் தன் மகனிருக்க மாட்டான் என்ற தைரியத்தயும் தாண்டி, கதறித்தேடினாள்.. இரண்டு நாட்களாக தேடிக்கொண்டிருந்தவளுக்கு சர்வ மதச்சடலங்களும் தென்பட்டாலும், தன் மகன் கிடைக்கவே இல்லை. வெறும் கையுடனும், விம்மிய கண்களுடனுமாய் தேடிக்கிடந்த கனியைத் தேற்றிய கிறுத்தவப்பாதிரியார் அவளை ஜெபக்கனியாக்கிச் சென்றிருந்தார். ஊர்திரும்பிய கனி.. மன்னிக்கவும், ஜெபக்கனி இன்றோர் தனி மரம். அப்பா, பீட்டர், குமார் சார், கெவின்.. காவு கொடுத்தாயிற்று. இழக்க ஏதுமின்றி, உதகைக்கே திரும்பினாள் 2005 ஆம் ஆண்டு..

ஒருவழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா "
டேய், சைக்கோ வருதுடா.. ஓடு", என்று சின்னாவிடம் சைகை காண்பித்து ஓடிய கிரிக்கு 10 வயது. சின்னாவிற்கும் 10 வயது. இருவரும் உடல் ஊனமுற்றோருக்கான சிறப்புப்பள்ளியின் ஐந்தாமாண்டு மாணவர்கள். கிரிக்கு காது கேட்காது. சின்னாவினால் காலை ஊன்றி நடக்க முடியாது. சைக்கோவென்றால் ஜெபக்கனி என்று சொல்லத்தேவையில்லை. அவர்கள் படிக்கும் வகுப்பின் ஆசிரியர் ராமிடம் சென்று சிறுவர்கள் ஓடும் காரணத்தை ஜெபக்கனி கேட்க, தானெடுக்கும் வகுப்பின் வீட்டுப்பாடம் செய்யாததால் வெளியே நிற்கவைத்தேன், உங்களைக் கண்டதும் ஓடுகிறார்கள், என்று ராம் சொல்ல, அன்று கிரிக்கும் சின்னாவிற்கும், பேராசிரியை ஜெபக்கனியின் அறையில் சிறப்புப் பூஜை. காலம் ஓடிக்கொண்டிருந்தது. பள்ளியில், தாய் தகப்பனற்ற, காருன்யாஸ்ரமத்தின் குழந்தையான ரம்யாவை மிகவும் பிடித்திருந்தது ஜெபக்கனிக்கு. ரம்யா வளர்ந்தவள், குழந்தையாகவே இருந்தாள். தனது பக்கத்து வீட்டு தோழி மற்றும் சக ஆசிரியையான தீபாவுடன் மட்டுமே சிரிக்கும் ஜெபக்கனி, ரம்யமாவிடத்தும் சிரித்துப்பழக ஆரம்பித்தாள். தீபாவிடம், தான் ரம்யாவை தத்தெடுக்கலாமா என்று ஆலோசனையும் கேட்கத் தவறவில்லை. குழந்தைச்சலனம் பற்றிக்கொண்டது. சரி, ஒரு நல்ல நாளில் அந்த நல்ல காரியத்தை செய்யலாமென்று காத்திருந்தாள்.

2015 நவம்பர் 1. கெவின் பிறந்ததினம், ரம்யாவைத் தத்தெடுக்க துணை வேண்டி, குமார் சார், பீட்டர், கெவின் படங்களுக்கு முன் நின்று அழுது மன்றாடி, தனது தாயார் சீலையுடுத்தி, புறப்பட்டு தேவாலயம் சென்றாள். தேவாலயத்தொழுகை முடிந்து, வெளியே வருகையில் கிரியும் சின்னாவும் விளையாடுவது கண்டு, போலியான ஒரு முறைப்போடு (உள்ளூர ஆனந்தமிருந்தாலும்), அவர்களைக்கடந்து சென்றாள். கிரியும் சின்னாவும் பின்செல்ல, பெட்டிக்கடையில் எல்லோருக்கும் கொடுக்க சாக்கலேட் வாங்கச்சென்று நின்றவள் காதினுள், கட்டதுரையின் காரினில் இருந்து வந்து விழுந்த, தான் முதலும் கடைசியுமாக பீட்டருடன் பார்த்த அந்தப் படத்தின் பாடல், "தேவனின் கோவில் மூடிய நேரம், நானென்ன கேட்பேன் தெய்வமே" "ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம் அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம் நானோர் கண்ணீர் காதலி" உண்மைதான்.. அவள் வாழ்வில் எல்லாக் கதவுகளும் முடித்தான் நின்றது. இறுதி வரை அவள் காதலித்ததென்னவோ கண்ணீர் தானே!! அழக்கூட கண்களில் நீர்வற்றிப்போனதே. இனி அவள் அந்த தெய்வத்திடம் கேட்க என்ன இருக்கிறது? . ஆறுதல் தேடி அலைந்திடும் அவள் மனதிற்கு இனியொரு வழித்துணை.. மகளாக.. ரம்யாவாக!! பாடல் முடியும் நேரம் புன்னகைத்த அவளைக்கண்ட கிரி, சின்னாவிற்கு அதிர்ச்சி கலந்த ஒரு ஆனந்தம்..
"டேய் பிசாசு சிரிச்சுடுச்சு டா.. வாடா எல்லார்ட்டயும் சொல்லலாம்" என்று சிரித்தபடி ஓடினர். அவர்களை பார்த்து அவள் சிரிப்பதற்கும், அந்தப்பாடல் முடிவதும், மணற்கொள்ளை அதிகரிக்கும் இந்த நேரத்தில், அந்த மணலே சரிந்து வந்து ஜெபக்கனியை கொள்ளையடித்துச் சென்றதும் ஒரே நேரத்தில் நடந்தது. !!! ஜெபக்கனி கண்மூடிய அந்த நேரம், ரம்யாவின் முகம் அவளது மூடிய இமைகளுக்குள் நிழலாடிச் சென்றது. சோகங்களிலும், சுமைகளிலும் மட்டுமே சுகங்களைக்கண்ட அந்த நாடோடி, தனது வாழ்வின் மொத்தக்குவியலாய் கண்ணில் எடுத்துச் செல்லாமல் சென்றது ரம்யாவை!! பீட்டரும், குமார் சாரும், கெவினும் தங்களது தங்கத்தாரகையான ஜெபக்கனியை இப்பூவுலகிலிருந்து அறுத்து கொண்டு சென்றனர், தங்களோடு சொர்க்கத்தில் சொந்தம் கொண்டாட நவம்பர் ஒன்று.. அவர்களது "அறுவடை நாள்"!!
Finally, she is at peace!!

RIP ஜபக்கனி!!
குருப்ரம்மா
குருப்ரம்மா
மறக்கமுடியுமா இதை 💪👌 எல்லாத்தையும் எழுது பாலு
ReplyDeleteகண்டிப்பா வன்ஸ்!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசோகம் நெஞ்சைப்பிழிகிறது!கதையை உயிர்ப்பித்தது உங்கள் எழுத்தோட்டம்! நிறைய எழுதுங்கள்!
ReplyDelete