நம்ம விறகு வெட்டி கோபால் , குளத்தில் கோடாரியை தொலைத்து, தேவதையிடம் நேர்மையாய் இருந்த காரணத்தினால் தங்கம், வெள்ளி, என எல்லாக் கோடாரிகளையும் அள்ளி வந்த கதை அறிவோம்.
அடுத்து ,அதே குளத்தில் மனைவி விழ, தேவதை முதலில் ரம்பையைக் காண்பித்த போது அய்யோ இவதாங்க என் சம்சாரம்!! என்றவனை முறைத்த தேவதையிடம், "ஆமாங்க நீங்க வரிசையா மூணுபேரக் காட்டுவிங்க, நான் சொந்தப் பொண்டாட்டியை கை காட்டினதும், நீங்க மூனையுமே என்னோட அனுப்பிட்டிங்கன்னா?? ஒன்னே கஷ்டம், இதுல மூன வச்சு எப்படி சமாளிக்க?? "என்று கேட்டவனுடன், சிரித்துக்கொண்டே அவன் மனைவியை மட்டும் அனுப்பி வைத்த கதையும் அறிவோம்.
இப்போ சொல்லப்போற கதை புதுசு,
நம்ம கோவாலில்ல கோவாலு, வீட்டுக்கு சம்சாரத்த கூட்டி வந்தோடனே, அந்தக்கா அவன் கழுத்தச்சேத்து ஒரு அப்பு உட்டு, ஏய்யா முட்டாளே, அந்தம்மாதான் (தேவதை) நீ குளத்துல எதப்போட்டாலும் மூணா தருதே!! நம்ம வீட்ல செம்புக்காசு சேத்த அந்த கனமான இரும்புப் பெட்டி இருக்குதே, அதைத் தூக்கிப் போடு, அதே கனத்தோட தங்கமும் வெள்ளியும் கெடச்சா காலத்துக்கும் கஷ்டப்படாம வாழலாம்லன்னு சொல்ல, இதைக்கேட்ட நம்ம கோவாலு, //அட இது தெரியாம ரெண்டு மூனு தட டிக்கட் எடுத்துட்டெனெப்பா// என்று மனதில் நினைத்தபடியே, கனமான அந்தப் பெட்டியை தூக்கிச் சென்று நடுக்குளத்தில் போட்டு விட்டு படகில் தாடியைச் சொறிந்தபடி அமர்ந்திருக்க, வெளிப்பட்டது தேவதை..
நம்ம கோவாலுக்கு கண்ணெல்லாம் ஆசை, உடனே தேவதையை கும்பிட்டு, "ஆத்தா பெட்டி ஒன்னு குளத்துள்ள போட்டேன் தெரியாம!! எடுத்துத்தாயேன் "என்று சோகமாக நடிக்க, அந்த தேவதை பொளேர்னு கோவாலு செவுல்லயே ஒன்னு விட்டுச்சாம். "ஏன்டா பேமானி, எதையுமே ஒழுங்கா வச்சுக்க மாட்டியா!! எப்போப்பாரு எதையாச்சும் குளத்துல போட்டுனுருக்க, பேப்பயலே!! பொட்டியும் கிடையாது ஒன்னும் கிடையாது. ஒழுங்கா போறியா இல்ல போலீசக் கூப்பிடவா" என்று மிரட்ட, பயந்து பம்மி படக கரைக்கு விட்டான்.
"டேய் நில்றா!! போறதுக்குள்ள இந்த வேட்டிய தொலைச்சாலும் தொலைச்சுடுவன்னு" சொல்லி, அந்தப்பய வேட்டிய மறமறன்னு உருவி கரை பக்கமா வீசிட்டு "அங்கே போயி கட்டிக்க, இனி இந்தப்பக்கம் வந்த, குறுக்க காட்டி மிதிச்சுப்போடுவேன். எப்போப்பாரு நொய்யி நொய்யின்னுட்டு. அதும் இரும்பு பெட்டிய தூக்கியாந்து நடுமண்டைல போடறான்.. போய்யா இனி இந்த குளமே எனக்கு வேணாம்" என்று கூறி, தலையை தேய்த்தபடி, அடுத்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கி பறந்தது தேவதை!!
காசுப்பொட்டியும் வேட்டியும் போன சோகத்தில், கோவணத்தோட, மீனுக்கெல்லாம் பயம் காட்டிட்டே கரை வந்து சேந்தானாம் நம்ம கோவாலு!!
மாரல் ஆஃப் தி ஸ்டோரி: வெட்டியா உக்காந்துருந்தா கண்டபடி எழுத தோணுமாம்!! பவர் இல்லை இங்கே!! அதான் இப்படி..!!
கத முடிஞ்சு போச்சு.. ஏஞ்ச்சுப் போங்க!!
No comments:
Post a Comment