இவர் எங்கு பிறந்தார், எப்படி வளர்ந்தார், படிப்பு, சினிமா, அரசியல், எதையும் எழுதப்போவதில்லை. இது வரை நான் பார்த்துவந்த 'ஜெ' என்பதே இது.
எனது தாயார் திரு எம்ஜிஆர் அவர்களது விசிறி. எனக்கு நினைவு தெரிந்து, அவர் இறந்த வீடியோ ஒன்று என் வீட்டினில் ஓடியபோது (அவர் சென்று பல வருடங்கள் கழித்து) அழுதுகொண்டிருந்த என் அம்மாவைப்பார்த்து ஏனென்று தெரியாமலே நானும் அழுத நினைவுகளை இன்று நினைத்துப்பார்க்கிறேன். வாலி அவர்கள் எழுதியதுபோலே
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்" என்று தோன்றலின் புகழோடு தோன்றிய தலைவர் அவர்!!
இன்றும் எனது அம்மா அழுது கொண்டுதானிருக்கிறார். ஏனென்று சொல்லாமலே எனக்குத் தெரியும் வயதென்றாலும், நானும் அழுதேன். ஒரு உயிரான உயிர் உயிர்த்தெழுந்து வராதா என்ற ஏக்கத்தோடு.
நான் பார்த்த 'ஜெ' ஒரு சர்வாதிகாரி. முதல்வர். அவர் அதிகாரத்தின் வீச்சு, இன்றவர் இல்லாதபோது தெரிகிறது. இத்தனை கோடி ஏழைகளின் மனதை யாருக்கும் விட்டுக்கொடுத்து விடாமல் தனித்தாண்டு, இனி "இவர் போல யார் என்று ஊர் சொல்ல" விட்டுச்சென்ற ஒரு சர்வாதிகாரச் செவிலி!!
ஆயிரம் குற்றங்கள் சாட்டப்பட்டிருந்த போதும், அவர் சிறையுடைத்து மீண்ட அன்று, கைத் தட்டிய கூட்டத்தின் கடைசி வரிசையில் நானும் நின்றபோது, அது சரியா தவறா என்று எனை நானே வினவிக்கொண்டதுண்டு. சரிதானடா அன்று நீ மகிழ்ந்தது என்று உறுத்தி, இன்று விடுபட்டு விழுகிறது என் கண்ணீர்த் துளிகள். தனியொருத்தியாய் தன்னைத்தாண்ட நினைத்த அத்துனை இடர் வேலிகளையும், "காளியாகி" காலி செய்த ஒரு பெண்மணி, இன்று மெலிந்தபடி காட்சியில்!! காணச் சகிக்கவில்லை, இதுவும் கனவாய்ப் போய்விடாதோ என ஏங்கும் உயிர்கள் ஏராளம் ஏராளம்!!
கீத்துச் சாந்திட்டு நீ சிரித்துநிற்கும் முகம், விரல்களைக்காட்டி நீ வழிநடத்தும் பாங்கு, ஆணாதிக்க உலகினில், ஆண்களையே ஆண்ட தோரணை இவையனைத்தும் நான் உன்னிடத்தில் ரசித்த விஷயங்கள்!! இனி எங்கு காண்பேனோ!!
புல்லட்டுகள் தாங்கும் உடைகள், ஏனந்த வியாதிகள் மறைக்கத் தோற்றுப்போனதோ தாயே!! இவர்பால் உள்ள அந்த அன்பு, இன்னும் சில காலங்கள் இவர் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கலாமோ என்ற 'ப்ச்' கொட்ட வைக்கின்றதென்னவோ உண்மை!! தங்கத் தாரகை, ஸ்ரீரங்கத்து தேவதை, இந்திய அரசியல் இனி என்றும் மறந்திடாத நிரந்தர மக்கள் முதல்வரே, மரணத்தை வென்ற மறவாப்புகழ் என்றும் உனக்குண்டு.. !!
அரசியல் சாசனமேற்றபோது "எந்த சொந்த விருப்பு வெறுப்புமில்லாது பணியாற்றுவதாய்" க்கூறி, உன் மேல் விருப்பையும், நீ விட்டுச்சென்றதால் வந்த வெறுப்பினையும், சூழ்ந்து நிற்கும் வெறுமையும், இனியார் என்ற கேள்வியையும் எல்லோரிடத்தும் விட்டுச்சென்ற உனக்கு, மேலுலகத்தில் தண்டனை காத்துக்கிடக்கிறது!! அங்கே உன்னாட்சி இல்லையாம்!! ஓய்வுதானாம் இனி உனக்கு!! ஓய்வெடு தாயே!! உனக்கு அதுதான் இனி வேண்டும்!! வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் உனக்கு இவ்வுலகே வேண்டாமென்று வேண்டிக்கொள்கிறேன்!!
""ஆயிரத்தல் ஒருத்தியம்மா நீ,
உலகம் பெருமை பேசும் பிறவியம்மா நீ,
பார்வையிலே குழந்தையம்மா
பழக்கத்திலே குமரியம்மா
!!ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ!!""
நதி நீரினில் கல்லிடும் நேரமெழும் அலைகளென , என்றோ ஒரு நேரம் அடங்கிடுவார் என்று அறிந்திருந்தபோதும், இன்று , மற்ற எந்தக் காட்சிகளையும் என் மனதில் ஏற்ற மறுத்து, தன் அழகு முகத்தினை மட்டும் விதைத்துச்சென்ற அந்தப் பொன்மகள், இனி மின்னிடமாட்டாளோ!!
போய்வா நதியலையே!!
கனங்களுடன்,
குருப்ரம்மா!!
She was a true fighter till d last day...an epitome of guts...but I do wanna add that every woman is a born fighter...she either fights or perishes...only some like jaya get noticed...may be bcz she is single as a journalist pointed out today...
ReplyDeleteBut as a true admirer, I salute u jeya ji...
So nicely written Guru. . Brings tears to the known & unknown feelings emanating at this sad situation..may her soul rest in peace 👐👐
ReplyDeleteVery well portrayed Amma's image Guru.... Hats off to you. Couldnt control my tears even now. Such a wonderful iron lady as everybody said we ever come across. A very big salute to you our beloved CM / Amma.....Please be rest in peace at least in heaven.....
ReplyDeleteAwesome guru! I'm not fan of jayalalitha amma , but she also like my mother... Indhu
ReplyDelete