Friday, April 21, 2017

!!என்றும் என்னுடனே 'என்னுள்ளே'!!

#குருபார்வை-7
என்றும் என்னுடனே 'என்னுள்ளே'

காலைல கார் ஓட்டிட்டு, ப்ளூட்டூத்ல ஃபோன கனெக்ட் பண்ணி பாட்டுகேட்டுட்டே வந்துட்டுருந்தேன். அப்போ ஒரு தோழி பாடி அனுப்பிருந்த "என்னுள்ளே என்னுள்ளே" டக்குன்னு ப்ளே ஆச்சு.. அவங்களோட குரல் தெய்வீக லெவல், அதைப்பத்தி அப்புறமா பாப்போம்"

"என்னுள்ளே"

என்ன மாயமந்திரமோ தெரியலைங்க, பகல் பன்னெண்டு மணிக்கும், பேயடிச்சாப்ல ஒரு இருட்டுக்குள்ளையே சுத்திட்டுருக்குது என் மைண்டு.. ராஜா சார் பாட்டுங்கறதையும் தாண்டி, இதை சுவர்ணலதாவோட பாட்டுன்னுதான் சொல்லுவேன்.
சிலரோட இழப்பு, அது நேரும்போது பாதிக்கறதை விட, அவங்களை என்னைக்காச்சும் ஞாபகப்படுத்திட்டு போறப்போதான் வலி அதிகமா உணரப்பட்டு, நம்மையும் மீறி அடக்கமுடியாம அழுதுடறோம்!! அப்பாவோட பேனா, அம்மாவோட புடவை, பாட்டியோட கம்மல், அந்த வரிசைல சுவர்ணாவோட "என்னுள்ளே"!!

என்ன பாட்டுன்னே தெரியாத அளவுக்கு செம ஓப்பனிங் மிருதங்கம்.. அதுக்கப்புறம், வழக்கம்போல அதகள ஓப்பனிங் ஹம்மிங் ப்ரீலூட் , ரொமாண்டிக் கிட்டார் எல்லாமே ராஜாமாஸ் எஃபக்ட்.. அதைத்தாண்டி, ஒரு குட்டி கோரசோட கோரசா சொர்ணா உள்ள நுழையறாங்க!

!!என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற!!

பல்லவி முடிவுல
" எதுவோ..ஓ.. மோகம்" .. சத்தியமா இந்த வரிகளுக்கு.. I fall in love with her every time. I mean everyyy time.!!

சரணம், கீபோர்டும், வயலினையும் புல்லாங்குழலையும், கோரசையும் வச்சு.. மனசக்கரைக்க குட்டியா ஒரு ஜலதரங்கத்தையும் கொடுத்து முடிக்க,
அடுத்து அது fade ஆகும்போது அடுத்து துளைக்குது

!!கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்!!

இன்னைக்குக் காலைலருந்து அந்த வெண்ணிலா முகந்தான் மனசுல அனலைக் கக்கிட்டே இருக்கு.. வேற வேலை ஓடலை!!

!!நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்!!

இந்த நாத ஒலியை நிறுத்தின பாடில்லை!! இதோட நூறாவதுவாட்டி இன்னைக்கே!! ச்சீ what an emotional idiot Iamனு எனக்கு நானே திட்டிக்கிட்டாலும், வயிறு நிரம்பற வரை சாப்பிட்டுதானே ஆகனும்., இன்னும் நிறையலை.. நிறையாது.. நிறையக்கூடாது.. சொர்ணாவ வேண்டிக்கறேன்..!!

!!மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன!!

தூண்டில்ல மாட்டப்பட்ட மீனப்போல ஆகிட்டன் டாக்டர்ர்னு தெனாலி கமல் சொல்றாப்ல.. குத்தி இழுத்துக்கொண்டு போறியே சொர்ணா!! விட்டுடாதே!!

!!என்னையே கேட்டு, ஏங்கினேன் நான்!!

உடைஞ்சு கண்ல தண்ணி வர்ற இடம் இதுதாங்க ஏன்னு எல்லாம் கேக்காதிங்காதிங்க, தெரியலை.. ராஜாவா, சொர்ணாவா, இழப்புகளா, வலியா, என்னவோ.. ஆனா எனக்கு அழமட்டும்தான் தெரியும்கறாப்ல அழறேன்.. அந்தக்குரல்ல என்ன ஒரு ஏக்கம், ஏங்கறதுலையும் என்ன ஒரு தீர்க்கம்.. இது.. ப்ச்.. வேணாம்!! புலம்புவேன்..

அடுத்து ஒரு ஹம்மிங்.. அதுலையும் எவ்வளோ variability..ப்பா.. ராஜா நம்மகிட்ட சொர்ணாவ நிலைநிறுத்தற சோகம் கலந்த ஒரு ஹம்மிங்

!!கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற!!

இந்தப்பாட்டைத் தாண்டின தியானமும் உண்டா.. எல்லாம் தெரியும் அப்படிங்கற விஷயத்தைப் பொய்யாக்கித் தன்னையறிதல் அப்படிங்கற நிலைய கொடுக்கறதுதான் தியானம்.. நான் காலைலருந்து தியானத்துலதான் இருக்கேன்.. இந்தக்குரலை எவ்வளவு காதலிச்சுருக்கேன்னு எனக்கே சொல்லாம சொல்லிக்கொடுக்குது இந்தப்பாட்டு. தியானத்தையும் தாண்டி அப்படி ஒரு லவ்!!

!!காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு!!

சொல்லிருக்காப்ல அப்படியே freeze ஆகிட்டாலும் நல்லாருக்கும்.. இக்கணம், இந்தப்பாட்டு இப்படியே ஓடிட்டே இருந்தா.. ரிப்பீட்டடா.. வேற எல்லாத்தையும் மறந்து இப்படியே இருந்துடலாம்னே தோணுது. மிகையா சொல்லலை.. இதான் உண்மை. சத்தியமான உண்மை..

!!காண்பவை யாவும் சொர்க்கமேதான்!!

'கேட்பவை' இப்போ எனக்கு!! ..

இப்போ கண்டிப்பா சொர்ணா இருந்துருந்தா, அந்த ஜீவன் இன்னும் எத்தனையெத்தனை சாதனைகள செஞ்சுருக்குமோ!! எவ்வளவு உயரங்கள் தொட்டுருக்குமோ!! இவ்வளவு சீக்கிரமா அது முடிஞ்சுருக்க வேண்டிய அவசியம் என்ன? அவங்க வாழ்க்கைல எவ்வளவோ வலிகள்.. அதையும் தாண்டி சாதனைகள்.
தெய்வம்!!

நீ சொர்கத்துலதான் இருப்பே சொர்ணா.. அங்கேயும் பாடிட்டேதான் இருப்ப..
இங்க நீ ஆயிரம் பாட்டுப் பாடிருப்ப..
இந்த ஒரு பாட்டே போதும் எனக்கு.. மீண்டும் மீண்டும் உன் நினைப்பு வந்துட்டே இருக்க..!!
இப்படி லவ் பண்ணிருக்கேனே அவங்களை, எனக்கே தெரியாம..
இந்தப்பாட்டு பழசுதான்.. இனி புதுசு எனக்கு.

"எதுவோ மோகம்" .. சொல்லத்தெரியலை.
அது என்னன்னு "என்னையே கேட்டு ஏங்கினேன் நான்" .. காலம்பூராவுமே இனி கேட்டுட்டே இருக்கும் அந்தக்கேள்வி.

சொர்ணா.. Love you!! Forever!! Miss you!!
இந்தப்பாட்டை எனக்கு ஞாபகப்படுத்தின அந்த தோழிக்கு.. ஆயுளுக்குமான அன்பு..!!

With love,
குரு